🛕 Arulmigu Dhanakotti Ammal Sathram Arakattalai

அருள்மிகு தனகோடியம்மாள் கட்டளை இணைப்பு அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019
🔱 Ekambareswarar

📜 About this temple

பல்லவர் காலத்துக் கோயில்; ஆத்தூர் கிராமத்துக்கு மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார் காஞ்சிமகா பெரியவர். 1938 -ஆம் வருடம் இங்கு வந்தபோது, அக்ரஹாரத்தில் உள்ள வெங்கய்யர் வீட்டில் தங்கி, அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்போது அவருடைய முகத்தில் ஏதோவொரு தேடல்... இங்கே, இந்த ஊர்ல சிவாலயம் இருக்கா, என்ன? என்று கேட்டாராம். மடத்து அன்பர்கள் ஊர்க்காரர்களைப் பார்க்க, அவர்கள் ஆமாம் என்றனர். அந்தக் கோயிலுக்குப் போகலாம், வாங்கோ ! என்று சட்டென்று எழுந்த பெரியவா, விறுவிறுவெனக் கிளம்பிச் செல்ல... மொத்த ஊரும் திரண்டு அவருக்குப் பின்னே சென்றது. கோயிலைப் பார்த்ததும் பரவசமானார் பெரியவா. அற்புதம்... அற்புதம் என்று சொல்லிக் கொண்டே, உள்ளே சென்றார். புதர் மண்டி, செடிகொடிகள் படர்ந்து காணப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, மகாபெரியவா !சிவ சன்னதிக்கு எதிரில் அப்படியே அமர்ந்துவிட்டார். சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக் கொண்டிருந்தவர், அடடே... என்று நெகிழ்ந்து போனார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் வேணுமே... என்று மடத்துச் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்ல... உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னிக்கிப் பிரதோஷம். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, ஸ்வாமிக்குப் பிரதோஷ பூஜை நடக்கப் போறது என்று சுவாமி சொல்ல... பூமாலைகளும் வில்வ இலைகளும், பழங்களும் சர்க்கரைப் பொங்கலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அன்று மாலை, தன்னுடைய திருக்கரங்களால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்தார். பிரதோஷ பூஜை சிறப்புற நடந்தது. மொத்த ஊரும் சிலிர்த்துப் போனது.

1945 மற்றும் 48-ஆம் வருடங்களில், இங்கு வந்த மகாபெரியவா, காமாட்சி அம்பாளுக்கும் வடகலீஸ்வரருக்கும் பூஜைகள் செய்திருப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).