📜 About this temple
முன்னொருகாலத்தில் சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவனருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவரும் சிறந்த சிவபக்தர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார். இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார். திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் சிவத்தல யாத்திரை சென்ற திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். காசி
பட்டினத்தார் முக்தி தலம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).