🛕 Arulmigu Renuga Devi Amman Temple

அருள்மிகு ரேணுகாதேவியம்மன் திருக்கோயில், தண்டையார்பேட்டை, சென்னை - 600021
🔱 Renuga Devi

📜 About this temple

சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளா தேவிக்கு பல பெயர்கள் இருக்கின்ற போதும், வட நாட்டில் சீதள் என்றும், தென் மாநிலங்களில் மாரி, மஹா மாரி, மாரியம்மன், எல்லையம்மன், கருமாரி, சீதளா தேவி, அமிர்த் வர்ஷினி என்றும், பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். சீதளா தேவி, பார்வதி அம்மனுடன் ஒப்பிட்டு வழிபடுகின்றனர். இந்த தேவியின் வழிபாட்டை தந்த்ர சாஸ்திரத்திலும், புராணங்களிலும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. சீதளா தேவியை, வசந்த ருது என்று அழைக்கப்படும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில், உலகத்தின் ராணியாக விழா எடுத்து கொண்டாடப்படுகிறாள். சீதளா தேவி கருணை உடையவளாகவும், மங்கல ரூபிணியாகவும், தயாநிதியாகவும், அருள்பாலிப்பவளாகவும், தன்னை வேண்டி வழிபாடு நடத்தும் பக்தர்களிடம், இரக்க குணம் உள்ளவளாகவும் விளங்குகிறாள். ஒரு சமயம், அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணி, அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியரின் உதவியுடன், ஆபிசார பிரயோகம் என்ற தீய சக்தியான, ஏவல் வினைகளை பயன்படுத்தினர். இதனால், தேவர்கள் கடுமையான வெப்பம் காரணமாக, உடலில் வைசூரிக் கொப்புளங்களுடனும், ஜுரத்துடனும், உடல்வலியுடன் அவஸ்தைப்பட்டனர். ஆனால், இதற்கு வைத்தியம் எதுவும் பலனளிக்க இயலாதபடி, ஜுர உபாதையுடன் கஷ்டத்தை அனுபவித்தனர். தேவர்களே ஆனாலும், துயரம் வரும்போது இறைவனின் பாதகமலங்களையே நாடுகின்றனர். அப்படி தேவர்கள் கயிலைநாதனின் தாள் பணிந்து, தாங்கள் படும் அவஸ்தையில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, செவிச் சாய்த்த சாம்பசிவனின் சடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும், பேரொளி ஒன்று தோன்றியது. அதுவே, புவனம் காக்கும் புவனேஸ்வரியின் ஒரு அம்சம். சீதளாம்பிகை என்ற திருநாமத்துடன், தேவர்களின் நலனுக்காக, பரமேஸ்வரனின் அருளுடன் தோன்றினாள். நித்யமான மந்திரங்களை அனைவருக்கும் கண்டுபிடித்து, வெளிப்படுத்துவரை ரிஷி என்பர். அப்படி மந்திரங்களை வெளிப்படுத்துவதில், சிறந்த மகாதேவனே, சீதளாஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தினை கூறி, சீதளாதேவியை வழிப்பட்டால், அனைத்து விதமான ரோகங்களில் இருந்து (வெப்பம் காரணமாக வரும் வைசூரி போன்ற) விடுபட்டு, நிம்மதி கிடைக்கும் என்று அருளினார். முறத்தினால் அலங்கரிக்கப்பட்ட சிரசும், குடமும், துடப்பமும் கையிலேந்தி, கழுதை வாகனத்தில் காட்சி தருவதாகவும், சீதளாஷ்டகத்தில் பரமேஸ்வரன்

இங்கு சீதளா தேவி, 64 வகையாக உஷ்ண மற்றும் குளிர்ச்சியால் வரக்கூடிய, சகல விதமான நோய்களையும் அழிப்பதுடன், பக்தர்கள் தான் விரும்பும் வரத்தை தரக்கூடிய தயாநிதியாக விளங்குகிறாள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).