📜 About this temple
இலங்கைக்கு மும்முறை சென்று வந்தவர் அனுமன் மட்டுமே, முதல் முறை ராமதூதனாக கணையாழியுடன் சென்று கண்டேன் சீதையை என்று அறிவித்தது. தீ வைத்து ராவணன் நகரை அழித்தது. மறுமுறை போருக்காக சேதுபந்தனம் அமைத்து, ராமபிரானுடன் சென்றது. மூன்றாவது முறை சஞ்சீவி மலைக்காக இமயம் சென்று வந்தது முதலும் கடைசியும் வான மார்க்கம். ராம-ராவண யுத்தம் அதி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வானர சேனைகள் ராம மந்திரத்தை தாரகமாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றியைக் குவித்தபடி இருக்கிறார்கள். ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! கோஷம் இலங்கையை மூழ்கடிக்கிறது. ராவண சேனைகள் நாளும் தேய்ந்தன. முக்கியத் தளபதிகள், ராவணனின் தம்பிகள் போன்றோர் வீரமரணம் எய்தினர். இதே நிலை நீடித்தால் தோற்பது உறுதி என்பதை உணர்ந்த ராவணன், கல்ஙகினான். அவனுக்கு ஆறுதல் சொன்னான். அவனது மகன் இந்திரஜித். மறுநாள் போருக்கு அவனே சென்றான். மாயங்கள் பல கற்ற அவன், லட்சுமணனுடன் போரிடும்போது நாகாஸ்திரம் ஏவி, ராமசேனையை முறியடிக்கத் திட்டம் தீட்டுகிறான். ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணன் மீது அஸ்திரம் பாய்ந்தது. அவதார நியதிப்படி, சாதாரண மனிதன் போல் அதனை ஏற்று மூர்ச்சையடைத்தான் இளையாழ்வார். வானரசேனைகளும் நாகாஸ்திரத்தின் வீர்யத்தால் தாக்குண்டு மூர்ச்சையடைந்தனர். பாணத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருவர் மட்டுமே! ஒருவர் ராமபிரான். அடுத்தவர் ஸ்ரீராம நாம மயமாக இருக்கும் வீர ஆஞ்சநேயர்! இளையவனும் இதர வானரவீரர்களும் இறுதி மூச்சை விடப்போகிறவர்கள் போல் மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்ட ராமர், ஜாம்பவான் மெதுவாக சுதாரித்து எழுந்து, சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தால் அனைவரும் பிழைப்பர் என்று உபாயம் சொல்ல, உடனே அனுமன் ராமனைப் பணிந்து புறப்பட்டார். மூலிகையை அடையாளம் காண அவகாசம் இல்லாததால், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கி வந்தார். அப்படி வருகையில், வங்காளக் கடலின் ஓரத்தில், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியா வந்தனம் எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்தான் புதுப்பாக்கம்.
கஜகிரி எனப்படும் குன்றின் உச்சியில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருவது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).