🛕 Arulmigu Athimoorkkamman Temple

அருள்மிகு அதிமூர்க்கம்மன் திருக்கோயில், பேரூர் - 641010
🔱 Athimoorkkamman

📜 About this temple

தற்போது இக்கோயில் அமைந்திருக்கும் இடமானது பல ஆண்டுகளுக்கு முன்னர் வனப்பகுதியாக இருந்தது. அங்கு இருளர்களாக ஒரு பாறையை கடவுளாக வணங்கி வந்தனர். பின்னர் நாளடைவில் ஒரு தோற்றம் அமைக்கலாம் என முடிவு செய்தனர். ஒரு சில விசேஷங்களின் அம்மன் மிகவும் ஆக்ரோஷமாக கட்சியளித்ததை பலரும் உணர்ந்துள்ளனர். அந்த ஆக்ரோஷமான உருவத்தை வரைந்து அதனை சிலை வடிவம் அமைத்துள்ளனர். மேலும், பல்வேறு விசித்திரமான நிகழ்வுகள் கோயிலை சுற்றி நடப்பதாக மக்கள் நம்புகின்றனர். உதாரணமாக இரவு நேரங்களில் காட்டுப் பூனைகள் கோயிலை சுற்றி வந்து அம்மனை வணங்குவதை பலரும் பார்த்துள்ளனர். எனவே இந்த கோவில் பேரூர் கோவிலைவிட பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியானது. அந்த பூர்வபட்டயத்தில் கரிகாற்சோழன் இந்த கோவிலுக்கு வந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. கரிகாற்சோழன் தனது சாபத்தீட்டை ஒழிப்பதற்க்காக கொங்கு நாட்டில் உள்ள கோவில்களை புதுப்பித்து, நொய்யலில் தீர்த்தம் எடுத்து குளித்துள்ளார். அப்போது இருளர் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோவிலுக்குள் சோழன் வருவதை மூர்க்கம்மன் அனுமதிக்கவில்லையாம். அதற்க்காக சோழ நாட்டை சேர்ந்த ஒருவரை பலி கொடுத்தால் மட்டுமே அனைவரும் இக்கோவிலுக்குள் வர முடியும் என மூர்க்கம்மன் சோழனின் கனவில் தெரிவித்ததாக கூறிப்படுகிறது. அதன்படி, சோழ நாட்டை சேர்ந்த ஒருவர் பலி கொடுத்த பின்னரே அனைவரும் அக்கோவிலுக்குள் செல்வதாக வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராம தேவதை கோவில்கள் இருக்கும். இந்த தேவதையின் கோவில் மிகவும் சிறியதாய் இருக்கும். இதுபோன்ற கிராமங்களில் சிவன் கோயிலோ, திருமால் கோயிலோ இருக்கும். ஆனால், அவற்றுக்கு முன்னதாக கிராம தேவதைக்கே உற்சவ பூஜை நடக்கும். அந்த கிராம தேவதைகளின் வரிசையில் பேரூர் கிராம தேவதையாக மூர்க்கம்மன் திகழ்கிறது. இக்கோவில் மிகவும் ஒதுக்குப்புறமாக, ஒரு வனத்தில் இருப்பதுபோல் இருப்பதால், வெளியூர் வாசிகள் செல்வது அரிது. பண்டைகாலம் முதல் தொன்றுதொட்டு பேரூர் கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது இந்த ஆதி மூர்க்கம்மனுக்கு தான் முதல் நாள் உற்சவம் நடக்கும்.

பண்டைகாலம் முதல் தொன்றுதொட்டு பேரூர் கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது இந்த ஆதி மூர்க்கம்மனுக்கு தான் முதல் நாள் உற்சவம் நடக்கும் என்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).