🛕 Arulmigu Badrakali Amman Temple

அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில், -, Pollachi - 642001

📜 About this temple

இந்து சமய வழிபாட்டு நெறியில் சக்தி வழிபாடு சங்க காலத்திற்கு முன்பே அமைந்ததாகும். தமிழகத்தில் உள்ள நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரித்ததுடன் அந்நிலங்களுக்குரிய அதி தெய்வங்களையும் அமைத்து தொன்றுதொட்டு வழிபட்டு வந்தவர்கள் நம்முன்னோர்கள். இவற்றில் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவையை வைத்து வழிபட்டுள்ளனர். கொற்றவை வழிபாட்டை சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். பண்டைய தமிழர்கள் வீரத்திற்குரிய தெய்வமாக கொற்றவையாகிய காளியை வைத்து வழிபட்டுள்ளனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் செம்மாண்ட கவுண்டர், பூமாண்ட கவுண்டர் என இரு கொங்கு வேளாள பெருமக்கள் சீரோடும் சிறப்போடும் கோவையின் வடபகுதியில் வாழ்ந்து வந்தனர். செம்மாண்ட கவுண்டர் பெயரால் செம்மணன் பட்டி என இவ்வூரை அழைக்கலாயினர். பின் பேச்சு வழக்கில் செவணம்பட்டி என ஆயிற்று. செவ்வணன்- சிவப்பு திருமேனி கொண்ட முருகன் எனப் பொருள்படும். பிற்காலத்தில் இப்பெயர் சொல் வழக்கில் மருவி, சரவணம்பட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது. இவ்வூரின் அருகே ரத்தினகிரியில் குமரன் குடிகொண்டுள்ளதாலும் அருகே உள்ள மடாலயத்தில் திருமுருகன் வீற்று அருளாட்சி புரிவதாலும் இவ்வூருக்கு சரவணம் பட்டி என்பது பொருத்தமானதே. அன்னை பார்வதிதேவி உலகில் ஒவ்வொரு தீயசக்தி தோன்றும் போதும், அதை சம்ஹாரம் செய்து உலகுக்கு நன்மை செய்யும் பொருட்டு பல வடிவங்களில் தோன்றுவாள். மகுடாசூரன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை சம்ஹாரம் செய்து பத்ரகாளியாக விளங்குகிறாள். படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.

அம்மனுக்கு எதிரே 108 மணியால் செய்த சூலமும், ஊஞ்சலும் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).