📜 About this temple
ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இலக்கணம் உண்டு. அதுபோல் கோயில்களுக்கு ஓர் இலக்கணம் உண்டு என்றால் இத்தலம் அதற்கு சான்றாக அமையும் எனலாம். கோயிலில் எங்கு நோக்கினும் தூய்மை தூய்மை ஒரு சிறு குப்பையைக் கூட காண முடியாத வகையில் மிகவும் நேர்த்தியாக பராமரித்து வருகின்றனர். இச்சிறப்பு மிக்க கோயில் கோவை மாநகரின் மையப் பகுதியான ராம் நகரில் அமைந்துள்ள கோதண்டராம ஸ்வாமி கோயில். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் எந்தவித பேதமும் இன்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் நகரம் கோவை. தற்போது கோயில் அமைந்துள்ள ராம்நகர் 95 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலப்பகுதியாக இருந்தது. அச்சமயத்தில் வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்து அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து வசிப்பதற்காக முடிவு செய்து, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்லாடர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர். அதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தற்போதுள்ள ராம்நகர் பகுதியைத் தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கினார். அங்கு வக்கீல்களும் குமாஸ்தாக்களும் வீடுகளைக் கட்டிக் கொண்டு குடியேறினர். அப்பகுதி அக்ரஹாரம், ரங்கநாதபுரம், கரிவரதபுரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வழிபாட்டுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வாக்குக்கு ஏற்ப கோயில் ஒன்றைக் கட்ட முடிவு எடுத்து அதற்காக 85 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் வாங்கப்பட்டது. கோயில் நிர்மாணிப்பதற்காக ஒரு குழுவை அமைத்தனர். கோதண்டராம ஸ்வாமி கோயில் கட்ட முடிவு செய்து, அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து 5.2.1933-ம் ஆண்டு அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தேறியது. மூலவராக சீதாதேவி லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்தி கல்யாண கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ராமருக்கு ஓர் கோயில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இப்பகுதி, ராம் நகர் என அழைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று சீரும் சிறப்புமாக விளங்கி வருகிறது. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோயில். படம், தகவல் : வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).