🛕 Arulmigu Kala Kaleswarar Temple

அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம் - 641107
🔱 Kala Kaleswarar

📜 About this temple

சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கும் முற்பட்ட இக்கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குத் தொடர்புடைய அம்மன் கோயில் எனப்படுகிறது. நவராத்திரி கொலு வைபவத்தின் போது ஈசன் காஞ்சிமா நதி தாண்டிச் சென்று அம்பு சவாரி நடத்திய இடம். திருக்கல்யாண உற்சவத்தில் இரவு நடுநிசிவேளையில் அம்பிகையை அழைத்து வந்து பட்டீஸ்வரருடன் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ந்த பின் சுவாமி ரதம் ஏறி வலம் வந்தது அக்கால சிறப்பு நிகழ்வாகும். காலப்போக்கில் இத்தலம் கவனிப்பாரற்று பராமரிப்பு இன்றி இருந்ததால் சிதிலமடைந்து சிறிது சிறிதாக இடிந்தே விட்டது. அம்பிகையின் திருஉருவமும் பழுதடைந்து விட்டது. மிஞ்சியது பாதம் மட்டுமே அப்பகுதியில் மாடுமேய்ப்பவர்களும், வழிப்போக்கர்களும் வழிபட்டுச் செல்வர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இத்தலம் இடிந்த நிலையில் இருந்ததால் இடிந்த கோவில் என்ற பெயர் நிலைத்துவிட்டது. அப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு இப்பெயர் சென்னால் தான் உடனே விளங்கும். வெள்ளலூர் சுவாமி என்பவர் இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டு அந்நிலையிலேயே வழிபடுபாடுகளை நடத்தி வந்தார். அச்சமயத்தில் அவரைச் சுற்றி பாம்புகள் ஊர்ந்து சென்றதையும், பாம்புகள் அவர்மீது கிடந்ததையும் அவ்வூர் முதியவர்கள் நினைவுகூர்கின்றனர். தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை

பொதுவாக சிவன் கோயில்களில் ஈசன் லிங்க ரூபத்தில் தனிச்சன்னதியிலும் அம்பிகை தனிச்சன்னதியிலும் அருள்பாலிப்பர். ஆனால் இத்தலத்தில் ஈசனும் அம்பிகையும் ஒருசேர தம்பதி சமேதராய் அமர்ந்து சிலா ரூபத்தில் அருள்பாலிப்பது பெருஞ் சிறப்பாகும். இது போன்ற ஸ்தலங்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலவே. உமையும் ஈசனும் தம்பதி சமேதராய் அமர்ந்து பக்தர்களின் வேண்டுதல்கள் யாவும் தாயுள்ளத்தோடு நிறைவேற்றி வைப்பது கண்கூடு. இது ஒரு சிறிய கிராமத்துக் கோயில். இருப்பினும் இத்தலத்தில் வியப்பிக்கும் தெய்வீக அதிர்வுகள் இத்தலத்தின் உன்னதத்தை உணர்த்துகின்றன. பூஜைகள் யாவும் தமிழ் முறைப்படியே நடந்தேறி வருகின்றன. கோயிலின் பெயர் இடிந்த கோயில் என்று இருந்தாலும் பலரது வாழ்க்கை துளிர்விட வஞ்சனை இன்றி வரம் அளிக்கிறார்கள் இத்தலத்து இறைவனும் இறைவியும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).