📜 About this temple
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை செய்ய பெரிய கல்லை தேர்வு செய்வது என்பது எளிதான காரியம் அன்று. பல இடங்களில் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எனும் ஊரில் 20 அடி ஆழத்தில் இருந்து எந்த பின்னமும் இல்லாத பாறையைத் தேர்வு செய்து வெட்டி எடுத்தனர். பின் அங்கேயே வைத்து தோராயமாக விநாயகப் பெருமான் உருவில் செதுக்கி எடுத்தனர். முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும் 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190டன் எடை (1,90,000 கிலோ) - எடை கொண்டவராகத் திகழ்கிறார். இதற்கென தயார் செய்யப்பட்ட தனி ஊர்தியில் ஏற்றி கோவிலின் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். பிரத்தியேகமாக ஒரு சாய்வு தளம் அமைத்து நிலைக்கு கொண்டுவர மட்டும் 18 நாட்கள் பிடித்தன. படுக்கை வசமாக வைத்து துல்லியமாக வடிவமைக்கப்பட்டு நுணுக்கமாக உருவாக்கினர். எந்த ஒரு இயந்திரத்தின் துணையும் இல்லாமல் இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியால் முழுதும் மனித சக்தியாலேயே இச்சிலையை நிலைக்குக் கொண்டு வந்து ஸ்தாபித்தனர். இந்த கோயில், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.விநாயகர் ,துதிக்கையில் அமிர்த கலசம், இடது காலில் மகாபத்மம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).