🛕 Arulmigu Nagapiliyar Temple

Arulmigu Nagapiliyar Temple, கோவைப்புதூர், Coimbatore - 641042
🔱 Nagapiliyar

📜 About this temple

இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான். நாரதரும் சிவபெருமானும்: இதனை அறிந்த நாரதர் நேராக திருக்கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், ""முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலிஉருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,'' என்றார். நாரதரும், மகாவிஷ்ணுவும்: இதையடுத்து நாரதர் திருமாலிடம் தனது கோரிக்கையை கொண்டு சென்றார். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மாவலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் நான் யாகம் நடத்த 3 அடி இடம் வேண்டும் என்றார். தன் கொடைப் பெருமையால் முகமும், அகமும் மலர மூவடி தந்தேன் என்றான் மன்னன். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு தன் நீண்ட கால்களால் உலகை இரண்டடியால் அளந்தார். 3ம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். தலையில் 3ம் அடியை அளந்தார். மகாபலி பிறவிப்பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான். தர்மதேவதை: இதனை அறிந்த தர்மதேவதை மகனை இழந்த துன்பம் ஏற்பட்டது போல் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் 3ம் அடி அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் புலம்பினார் மகாவிஷ்ணு. சாபவிமோசனம்: இதுகேட்ட சிவபெருமான் திருமாலிடம், ""18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, திருவாடானை என்னும் திருத்தலத்திலுள்ள ஆதிரெத்தினேஸ்வரரை தரிசிக்க வேண்டும். இரவில் துயில்கொள்ளும்போது சிவபெருமான் கனவில் தோன்றி, இந்த இடத்திற்கு தெற்கில் திருவெற்றியூர் என்னும் தலம் உள்ளது. அங்குள்ள வாசுகி தீர்த்தத் தில் நீராடி லிங்கத்தை தழுவி வழிபட்டால் உன் புற்று நீங்கும்,'' என்று கூறி மறைந்தார். கங்கா தேவியை அழைத்து, "" தர்ம தேவதை திருமாலுக்கு புற்று நோய் வருமாறு செய்து வேதனை

புற்றுநோய் தீர்க்கும் தலம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).