📜 About this temple
கூப்பிய கரங்களுடனோ அல்லது வரம் தரும் மூர்த்தமாகவோ அனுமனை பல்வேறு தலங்களில் தரிசித்திருப்பீர்கள். ஒரே சன்னதியில் இரண்டு அனுமன்கள்; அதிலும் ஒரு திருமேனி கிடந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தமாக அமைந்திருக்க மற்றொரு திருவடிவம் சஞ்சீவி அனுமனாக காட்சியளிக்கிறது. அனுமன் இரு வடிவில் காட்சி தருகிறார் என்றால், விநாயகரோ இங்கே இருமுகங்களுடன் துவி முககணபதியாக அருள்கிறார். ஆதியான விநாயகரும் அந்தமான அனுமனும் இங்கே இரு வடிவங்களுடன் காட்சி தருவதால், இங்கு வந்து வேண்டினால் இருமடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சீதையைத் தேடிவந்த அனுமன், அசோகவனத்தில் அன்னையைக் கண்டதும், ராமபிரான் குறித்த விவரங்களைத் தெரிவித்துவிட்டு, கணையாழியைத் தந்து கலக்கம் தீர்த்தான். பின்னர் அந்த நற்செய்தியை ராமரிடம் தெரிவிக்கப் புறப்பட்டான். வானில் தாவிப்பறந்தவன், வழியில் வெண்மை நிறைந்த ஆறு ஒன்று ஒரு மலையிலிருந்து இறங்குவதைக் கண்டான். அது தரையைத் தொடும் இடத்தில் பச்சைப்பசேல் என்று வனம் அடர்ந்து செழித்திருந்தது. இலங்கையை எரித்தபோது, அசோகவனத்தில் இங்கும் அங்கும் தாவித்தாவி குதித்ததாலும், நெருப்பு, புகையினாலும் ஏற்பட்ட அழுக்குப் படிந்த உடலோடு இருந்த அனுமன் சற்றே ஆசுவாசம் கொள்ளவும் தன் தோற்றம் ராமபிரானுக்கு மகிழ்ச்சியான செய்தியை உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நீராடி அழுக்கினைப் போக்கிக்கொள்ளவும் அந்த இடத்தில் இறங்கிச் செல்ல நினைத்தான். அதேசமயத்தில் அவனது வேகம் தடைப்பட்டு மேலும் பறப்பது தடைப்பட்டதால் ஆச்சரியம் அடைந்தான். என்ன காரணம் என அறிய முற்பட்டவன், தன் நிழல் கீழே ஓரிடத்தில் விழுவதையும், அது நகராமல் இருப்பதே தானும் அசைய இயலாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் உணர்ந்தான். எவ்வளவு முயன்றும் அவனது நிழல் அந்த இடத்தை விட்டு அகலாமல் இருந்ததோடு, அவனை மேலே பறக்க விடாமலும் தடுக்கவே, கீழே இறங்கி, ஆர்ப்பரித்துச் செல்லும் அந்த காட்டாற்றை நோக்கி, புண்ணிய நதிகளே, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றான். நாங்கள், தேவலோகத்து விரஜா நதிகள். அறம் நிலைக்கப் போகும் பூமியை வணங்கி வளப்படுத்த வானிலிருந்து இறங்கி வருகிறோம். ராமபிரான் இத்தலம் வரப்போகிறார். அவரது பாதம் பட்டால் எங்களுக்குப் புண்ணியம் சேர்ந்து பாவம் தொலையும். ராமகாரியத்தில் ஈடுபட்டுள்ள உங்கள் திருப்பாதமும் எங்கள் மேல் படவேண்டும் என்பதற்காகவே உங்கள் நிழலைக் க
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீரஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).