🛕 Arulmigu Venkatesa Perumal Temple

அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில், Varapalayam, 22,Nanjundapuram - 641020

📜 About this temple

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பசுக்களை மேய்த்து வந்த சிறுவன் ஒருவன், புத்தி சுவாதீனம் இல்லாதவன் போன்று புலம்பிக் கொண்டும், தெய்வங்களை வணங்கிக்கொண்டும், அருகில் இருந்த குன்றின் மீது ஏறி குதித்துக்கொண்டும் இருந்தான். அவனது நடத்தையில் சந்தேகமுற்ற அவனது பெற்றோர்களும், ஊர் மக்களும் சேர்ந்து ஓர் நாள் காலையில் அவன் வசித்த பசுக்கொட்டகையில் மறைந்து கொண்டு கண்காணித்தனர். அப்போது, அவன் நான்கு சுமை புளியம் விறகுகளை நெருப்பில் கொளுத்தி எரிந்த பின் அதனை தனது கையில் அள்ளி வாழை இலையில் வைத்து அருகில் இருந்த ஓர் கிணற்றில் மிதக்கவிட்டு அதன் மீது அமர்ந்து திருப்பதியை நினைத்து மந்திரங்களை கூறியபடி சுவாமியை பூஜித்தான். இக்காட்சியைக் கண்ட அவர்கள் சிறுவனின் வடிவில் வந்திருப்பது வெங்கடாஜலபதி என்பதையறிந்து அவனை வணங்கி கோயில் எழுப்ப உத்தரவு கேட்டனர். அப்போது அவன் நான்கு ஒட்டர்களை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓடிச்சென்று ஓரிடத்தில் மண்ணை அப்பறப்படுத்தி குழி தோண்டச் செய்தான். பின் அவன் அக்குழியில் இறங்கி அங்கே இருந்த பாறையை ஓங்கி அடித்தான். அப்பாறை இரண்டாகப்பிளக்க, அதன் கீழ் பூமணல் நிறைந்திருந்த குழி இருந்தது. அதன் கீழ் தேவர்களால் பூஜிக்கப்பட்ட சாளகிராம சிலை, சங்கு மற்றும் தாமிரக்கிண்ணம் இருந்தது. அதனை அப்படியே எடுத்து அருகில் இருந்த ஊஞ்சமரத்தின் கீழ் வைத்து அதன் பின்பு தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சில காலம் கழித்து ஓர் முறை அச்சிறுவன் வடிவில் மீண்டும் வந்த வெங்கடாஜலபதி, அவ்வூருக்கு வடக்கே உள்ள காயல்பட்டினம் எனும் ஊரில் வடக்கே நீண்டிருக்கும் புளியமரத்தின் கொம்பின் கீழ் ஒரு கொப்பரை தனம் இருப்பதாகவும் அதை எடுத்து வந்து தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினான். அதன்படி அதனை எடுத்து இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பெருமாள் சாளகிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள வெங்கடேசர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு வைணவத்தலங்களில் காண முடியாத சிறப்பாக உள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).