📜 About this temple
இது ஒரு கிராமத்து கோயில் வளமான விளைநிலங்கள், பசுமையான தென்னந் தோப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள ஓர் அழகிய கோயில் வட்டமலை ஆண்டவர் கோயில். கிராமத்து கோயில் என்றாலும் அதன் பராமரிப்பு, சுத்தம் ஆகியவற்றைக் காணும்போது பிரமிப்பூட்டுவதாக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் பசுஞ்சாணமிட்டு ஒரே சீராக மெழுகப்பட்டிருந்தது அழகுக்கு அழகுசேர்ப்பதாக உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். எனச் சொல்லப்படுகிறது. விவசாயி ஒருவர் கனவில் முருகன் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான்சுயம்பு மூர்த்தமாக உள்ளதாகவும் அங்கு தனக்கு ஒரு கோயில் அமைத்து வழிபாடுசெய்யுமாறும் கூறினார். அவ்விவசாயி ஊர் பெரியவர்களை அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் பார்த்தபோது ஒரு சுயம்பு மூர்த்தம் இருப்பதைக் கண்டனர். அவ்விடத்தில் ஒரு கற்கோயிலை எழுப்பி தினசரி பூஜைகள் நடந்து வரலாயிற்று. அங்கு தண்டத்துடன் கூடிய அழகிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். கிராமமக்கள் ஒன்று கூடி பேசி கோயில் கருவறை திருப்பணி, முன்மண்டபம் கட்ட முடிவு செய்தனர். மூலவர் சிலையை பாலாலயம் செய்து கோயில் வாயு மூலையில் தற்காலியமாக அறை அமைத்து அதில் மூலவர் சிலையை வைத்து பூஜித்துவந்தனர். அனைத்து வைபவங்களும், ஆராதனைகளும் இச்சன்னிதியில் நடைபெற்று வந்தன. பல்வேறு காரணங்களினால் கட்டிட பணிகள் சுமார் 10 ஆண்டுகள் ஸ்தம்பித்து விட்டன. கிராமத்து கோயில் என்பதால் நிதி வசதிகள் குறைவுதான். விவசாயிகளின் சாகுபடியைப் பொருத்தே நிதிநிலை இருக்கும். கோயில் திருப்பணி நின்றுவிட்டதால் அனைத்து மக்களும் மனதால் பாதிப்படைந்தனர் ஊர் மக்கள் ஒன்றுகூடி, கட்டிட பணிகளை தாமே மேற்கொள்ளும் முடிவை எடுத்தனர். மாட்டுவண்டிகளில் தாமே மணல், செங்கல் போன்றவற்றை கொண்டுவந்து சேர்த்தனர். கட்டிடப்பணியிலும் முழு ஈடுபாட்டுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். சுதைச் சிற்பம் கல்வேலைப்பாடுகளுக்கு மட்டும் சிற்பிகளை வேலையில் அமர்த்தினர். விளைவு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே அனைத்து பணிகளும் முடிவுற்றன. முருகப் பெருமான் எப்போதும் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவார். இங்கும் அதுபோலவே ஒரு பெரிய வட்ட வடிவமான பாறைமீது கருவறையும் கோயிலும் அமைந்திருப்பதைக் காணலாம். மூலவர் சிலையும் உயர்ந்த இடத்தில் உள்ளது. இதன் காரணமாகத்தான் வட்டமலை ஆண்டவர் என்ற திருநாமத்தைப் பெற்றார். படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவ
பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி. மலர் அலங்காரத்தில் புன்னகை ததும்பும் அழகை எத்தனை கேரம் கண்டு தொழுதாலும் சலிக்காது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).