📜 About this temple
300 ஆண்டுகள் தொன்மையான திருத்தலம். கோவை மாநகரின் மையப்பகுதியான சுக்கிர வாரப்பேட்டை அருகில் உள்ளது. ஒருமுறை கேரளாவிலிருந்து மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனைத் தரிசிக்க பூசாரியுடன் சென்ற குழுவினர் மனதார வேண்டி தரிசனம் செய்தனர். இந்த அம்மன் நமது ஊரிலேயே எழுந்தருளி அருள்பாலித்தால் எப்படி இருக்கும் என எண்ணினர். மேலும் தமது ஊருக்கு அழைத்துச் சென்று கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்யவும் விரும்பினர். அம்மனை பிரார்த்தித்து தங்கள் வேண்டுகோளை வைத்தனர். நீண்ட நேர அமைதிக்குப் பின் அம்மன் நேர அமைதிக்குப் பின் அம்மன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் வர ஒப்புக்கொண்டார். அத்துடன் ஒரு நிபந்தனையும் விதித்தார். நீங்கள் என்னை அழைத்துச் செல்லும் போது மேள தாளத்துடன் முன்னே செல்ல வேண்டும். நான் உங்கள் பின்னே சிறிது தூரம் தள்ளி நடந்து வருவேன். அதற்கு அறிகுறியாக எனது கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே வரும். யாரும் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி திரும்பி பார்த்தால் நான் திரும்பிச் சென்று விடுவேன் என்றார். அனைவரும் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். அம்மனை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு செல்லும் போது கோவை வழியாகச் சென்றனர். தீடீரென கொலுசுச் சத்தம் நின்றது. சிறிது நேரம் அனைவரும் அமைதி காத்தனர். அதிர்ச்சி அடைந்தனர். திரும்பிப் பார்த்தால் அம்மன் கோபித்துக் கொண்டு திரும்பிச் சென்று விடுவாரே என்ற அச்சத்தில் காத்திருந்தனர். சிறிது நேரம் இடைவெளிக்குப் பின் மறுபடியும் அம்மன் நடையைத் தொடர கொலுசு சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஒரு வித நிம்மதியுடன் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்படி அம்மன் நின்ற இடம் தான் தற்போது கோயில் அமைந்துள்ள இடம். கோயில் இருக்கும் இடம் வாணிபர் வீதி ஆகும். இக் கோயிலுக்குச் சொந்தமான நந்தவனத்திற்கு அருகிலும், தெப்பகுள வீதி சாரதா பாட சாலை மைதானத்திலும் குடிநீருக்கு ஆதாரமாக இருகுளங்கள் இருந்தன. மாதே ராஜ குளம் சிக்கே ராஜ குளம் என டணாயக்கன் கோட்டை தண்ட நாயக்கர்கள் பெயரில் அவை அழைக்கப்பட்டன. கோவையை மைசூர் அரச பிரதிநிதிகளாக ஆண்டவர்கள் இவர்கள். நகரின் சுகாதாரம் காக்கவும் தற்கொலைகளைத் தடுக்கவும் 1920 முதல் 1930க்குள் இந்த இரு குளங்களையும் நகரசபை மூடி விட்டதாக இதுவோ எங்கள் கோவை எனும் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி வாணிபர்கள் மிகுந்த பகுதி. பெரியவர்கள் எல்லாம் ஒன்றுகூடி முடிவெடுத்து ஒரு சி
The Temple Is Open From 7.30 A.M. To 11.00 A.M. And From 6.00 P.M. To 8.00 P.M. On Fridays The Timing Is From 7.30 A.M. To 12.00 A.M. And Between 6.00 P.M. And 8.30 P.M.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).