🛕 Arulmigu Ananthaeswarar Temple

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், பேர்பெரியான்குப்பம் - 607805
🔱 Ananthaeswarar

📜 About this temple

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேஷன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேஷன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேஷன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் அத்திரி மகரிஷி, அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், "அனந்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.

இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார்

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).