🛕 Arulmigu Ayyanar Temple

அருள்மிகு அய்யனார் திருக்கோயில், மேல்நெமிலி - 608105

📜 About this temple

சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஐயனார் வழிபாடு பிரபலம் அடைந்து விட்டது. தமிழகத்தில் தொன்மையான ஊர்களில் வடக்கில் பிடாரியும், தெற்கில் ஐயனாரும் கோயில் கொண்டுள்ளனர். ஐயனார் என்பவர் பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காதலால் உருவான கடவுளாவார். கையனார் என்ற சொல்லே பிற்காலத்தில் ஐயனார் ஆயிற்று என்றும் கூறுவர். மிகவும் புகழ் பெற்ற தலமான திருநாரையூரில் எழுந்தருளியுள்ள ஐயனாரும் புகழ், பெருமைக்குரிய கடவுளாவார். தெய்வ அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் திருஅவதாரத் தலம் திருநாரையூர் ஆகும். ஒருமுறை நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இவ்வூரைக் கடந்து மாலை வேளையில் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்பகுதி அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது அச்சமயம் அவளுக்குப் பிரசவ வலி வந்துவிடவே துணைக்கு யாரும் இன்றித் தவித்திருக்கிறாள். அப்பொழுது ஐயனார் ஒரு பெண்ணாகத் தோற்றம் பெற்று நல்ல முறையில் குழந்தை பிறக்கச் செய்தார். பின்னம் இரவு முழுவதும் அவளுக்கு துணையாக இருந்து விட்டு விடிந்தவுடன் மறைந்து விட்டார். அதன்பிறகுதான், தனக்குத் தாயாக வந்து பிரசவத்திற்கு உதவியவர் ஐயனார் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் அடிப்படையில் ஐயனாருக்கு இங்கு கோயில் கட்டி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அருள்பாலித்து வருகிறார். தன் பக்தர்கள் யாரும் வாழ்வில் இன்னல்பட்டு முடங்கிப் போகாமல் காத்து வருவதால் இந்த ஐயனாருக்கு மங்காமல் காத்த ஐயனார் என்று சிறப்புப் பெயரும் உண்டு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).