📜 About this temple
நகரில் 1995 புதியதாக கட்டப்பட்ட செல்வ முத்துவிநாயகர் கோயில் 2008 இல் கும்பாபிஷேகம் நடத்த நகர் வளர்ச்சிகுழுத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான கண்ணன் வேணுகோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் தற்போதுள்ள விநாயகர் கோயில் தவிர சிவன் கோயில் அமைக்கவும், விநாயகர் கோயிலை புரணமைத்து கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் ரூ.16 லட்சம் செலவில் கைலாசநாதர், காமாட்சியம்மன், கஜலட்சுமி, வினாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் புதிய கோயில் கட்டப்பட்டது. கோயில் கட்ட முதற்கட்டமாக பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்ரீசரணர்கள் அனைத்து தெய்வமூர்த்தி சிலைகளையும் இவலசமாக வழங்கி, பொருளாதார வசதி அமோகமாக வர்சிக்க வேண்டுமாய் அருளாசி வழங்கினர். அவர்களின் ஆசிபடி வெகு விரைவில் நடந்தேறியது. செல்வந்தர்கள் பலர் தானே முன்வந்து நன் கொடை வழங்கிய நிலையில், நிர்வாக குழுத்தலைவர் கண்ணன்வேணுகோபால் தன் சொந்த வருவாய் பல செலவிட்ட நிலையில், செயலர் பழனியப்பன் தன் பங்கிற்கு உதவியுள்ளார். கோயில் இதர செலவினங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் உரியத்தொகை இறைவன் ஈசன் அருளால் விரைவில் கிடைக்க கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் 2010 ஜூன் 10ம் தேதி திரயோதசி திதியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும், சாத்யயோகமும் கூடிய சுபயோக தினத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
The Temple Is Open From 8.00 A.M. To 12.00 A.M. And From 4.00 P.M. To 7.00 P.M.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).