🛕 Arulmigu Kolanciyappar Temple

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர் - 606003
🔱 Kolanciyappar

📜 About this temple

தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், , விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். "விருத்தம்' என்றால் "பழமை' என்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம். அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார். இறைவன் செயலால் இப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரர், திருமுதுகுன்றம் வந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, பாடல் பாடி, இழந்ததை பெற்று சென்றார். சுந்தரரை வழிமறித்து வேடுவராக வந்த முருகப் பெருமானே திருமுதுகுன்றத்தின் மேற்கே சுயம்புமூர்த்தியாக தோன்றி சுந்தரருக்கு அருள்பாலிக்கிறார். முருகன் தோன்றிய இடத்தில் "குளஞ்சி' எனப்படும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் இவர் "குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் "கொளஞ்சியப்பர்' என திரிந்தது.

இத்தல முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).