🛕 Arulmigu Muthukumarasamy Temple

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், கடலூர் ஓடி, கடலூர் - 607003
🔱 Muthukumarasamy

📜 About this temple

நமுசி என்ற அசுரன், எத்தகைய பலமான ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால், ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தினான். இந்திரன் அவனுடன் போரிட்டு தோற்றான். தனக்கு அருளும்படி சிவனை வேண்டினான். சிவன் அவனிடம், இங்குள்ள கடலில் நுரையை எடுத்து அதை அசுரன் மீது வீசும்படி கூறினார். அசுரன் பெற்ற வரத்தின்படி, ஆயுதங்களால் தான் அவனுக்கு அழிவு உண்டாகாது. கடல் நுரை என்பது ஆயுதமாக கருத முடியாதென்பதால், அசுரனை அழிக்க சிவன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்தார். அதன்படி, இந்திரன் கடல் நுரையை வீச, அசுரன் அழிந்தான். மகிழ்ந்த இந்திரன் இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்தான். இவர் விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு "இந்திர லிங்கம்' என்றும் பெயருண்டு. காலப்போக்கில் இவரது பரிவார மூர்த்தியாக எழுப்பப்பட்ட முத்துக்குமர சுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால், இவர் பிரசித்தி பெற்று விட்டார். கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

விழாக்காலங்களில் முருகப்பெருமான் அவருக்குரிய ஆடு, மயில் வாகனங்கள் தவிர, சிவனுக்குரிய ரிஷபம் மற்றும் ஐராவதம் எனப்படும் தேவலோகத்து வெள்ளை யானையிலும் பவனி வருவார். இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமென்பதால், அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக, சுவாமி இவ்வாறு பவனி வருவதாகச் சொல்கின்றனர். முருகன் அருள்பெற்ற இடும்பனும் இங்கு வாகனமாக இருக்கிறார். இவர் மீதும் சுவாமி பவனி செல்வார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).