📜 About this temple
சிதம்பரம் அருகே பெருமாத்தூரில் வாழ்ந்த திருவேங்கடம் பிள்ளை வள்ளலார் பக்தர். இவர் மகள் மாதரசியும் தந்தையுடன் ஈடுபட்டு வள்ளலாரை வணங்கி வந்துள்ளார். திருமணம் வேண்டாம் என மறுத்தவரின் கனவில் ஒருவர் தோன்றி திருமணத்திற்குப் பின் அதிசயம் காண்பாய், அற்புதம் நிகழ்த்துவாய் என சொல்லி மறைந்தார். அதன் பின் 60 நாட்களில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. மாதரசி தந்தை குறிப்பிட்ட நாளில் தான் இறந்து விடுவாக கூறியவர் அப்படியே இறந்தார். திருமணம் முடிந்த 30 நாள் இரவு மீண்டும் அதே உருவம் மாதரசி கனவில் தோன்றி அதிசயத்தை காண்பிக்க அழைத்து சென்றார். தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் மற்றும் கணவர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் முட்புதற்களை வெட்டிக்க கொண்டு நடு காட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு புற்று வடிவில் அம்மன் காட்சிக் கொடுத்தார். அதன் பின் கீற்றுக் கொட்டகையில் கோயில் கட்டினர். படிப்படியாக கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 10 அடி உயரத்தில் புற்றும் வளர்ந்துள்ளது. தற்போது மாதரசி அம்மையார் கோயிலை பராமரித்து பாதுகாத்தும் அருள் வாக்கும் அளித்து வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
இங்கு அம்மன் சுயம்புவாக உருவானவர்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).