📜 About this temple
பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாக பார்க்கின்ற சிவ லிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் அக்னி திகள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மூலவருக்கு கீழே நவக்கிரக யந்திரமும், வெளியே நந்தி மண்டபமும் உள்ளது. இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து பலனடைகின்றனர். பிதுர் தோஷத்துக்கும் ஏற்ற தலம் இது. ராஜகோபுரம் திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் 3 நிலை, 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது. மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).