🛕 Arulmigu Theerthapurieswarar Temple

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை - 606111
🔱 Theerthapurieswarar

📜 About this temple

நரிமேடு, எழுமேடு பகுதிகளின் தெற்கே உள்ள கெடில நதியை தென்கங்கை என திருநாவுக்கரசுப் பெருமான் தாம் பாடிய திருவதிகை வீரட்டானத் தேவாரப்பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஓர் புராண வரலாறு இப்பகுதிக்கு உண்டு. கங்கை நதி: கங்கை சொர்க்கத்தில் மந்தாகினி எனவும்; பூமியில் கங்கை எனவும், பாதாளத்தில் போகவதி எனவும் பெயர் பெற்றவள். இவள் உலகிலுள்ள மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கு உண்டான பலன்களை கொடுக்கக்கூடிய புனிதமானவள் என்பதை புராணங்கள் வழியே அறிகிறோம். இவள் பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்தாலும், சிவபெருமானின் திருவருளாலும் ஏழுதுளிகளாய் பூமியில் விழுந்து ஆறாகப் பெருக்கியவள் என்றும். உமையவள் தமது திருக்கரங்களால் விளையாட்டுக்காகச் சிவபெருமானின் கண்களை மூடியபோது அம்மையின் கரங்கள் வழியே பெருகிய நீர் வெள்ளமாகப் பெருகிவர, அதைச் சிவபெருமான் தன் சடைமுடியில் தரித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மேலும் கங்கையானவள் சிவபெருமானை மணக்க விரும்பியதை உமையவள் குறிப்பால் உணர்ந்து இரேணு என்பவனுக்கு மகளாகப் பிறக்க சாபமிட்டார். அந்த சாபத்தின் கோபத்தால் அமங்கலம் பெற்றதாகவும், பின்பு கங்கையானவள் உமையவளைக் குறித்து செய்த தவப்பயனால் மங்கலம் பெற்றாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கங்கையைப் பற்றி இதுபோன்ற பற்பல புராணங்கள் கூறப்பட்டாலும், திருஅதிகையில் சிவபெருமான் முப்புர அசுரர்களின் கோட்டைகளை முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எரித்துச் சாம்பலாக்கியபின் சிவபெருமானும், உமையவளும் தனிமையில் ஓய்வெடுக்க விரும்பி கெடில நதியைப் படைத்து அதில் குளித்து மேனியைக் குளிர்வித்தார்கள் எனவும், இவ்வாறு நீராடும் போது சிவபெருமானின் சடைமுடியில் இருந்த கங்கையானவள் கெடில நதியில் கலந்ததால் இந்நதி தென்கங்கை பெயர் பெற்றது எனவும், அதன்பிறகு நரிமேடு-எழுமேடு எனும் பகுதி அக்காலத்தில் அபூர்வமான மூலிகைகள் நிறைந்த பசுஞ்சோலையாக இருந்தால் தங்களது உடல் வெப்பத்தைத் தணிக்க இங்கு எழுந்தருளி ஓய்வெடுத்தனர் என்றும் இப்பகுதி மூத்தகுடிமக்களால் வழிவழியாக கூறப்பட்டு வந்த செவிவழிச் செய்தியாகும். எனவே வெப்பத்தின் மூலம் நம் உடலில் உண்டாகின்ற நோய்கள் பலவும் இங்கு எழுந்தருளிய அம்மை அப்பனை வழிபடப்பெற்ற திருத்தலமாக இக்கோயில் சிறந்து விளங்கி இருந்தது என்பதும் மரபு வழிச் செய்தியாகும். இந்த புராணத்தை அறிந்த வெம்மை நோயுற்ற மன்னர் ஒருவர் பிற்காலத்தில் அந

பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு. உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் தலம். வைத்தீட்வரராகவும், மருந்தீட்சரராகவும் இருந்து அருள்புரிகிறார். திருஅதிகையில் முப்புரம் அழித்து அம்மை அப்பர் இருவரும் ஓய்வெடுத்த சிறந்த மூலிகைகள் கலந்த பூந்தோட்ட வனமான இங்கு ஓய்வெடுத்து உடல்வெப்பத்தை போக்கிக் கொண்ட நதியும், குளுமையைப் போக்கி கொண்ட பூந்தோட்டமான திருக்கோயிலும் ஆகும். வெப்ப நோயை நோக்கி ஆரோக்கியம் தந்த தலம். இறைவனுக்கே உரிய அற்புதத் திருத்தலமாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).