🛕 Arulmigu Velavinayakar Temple

அருள்மிகு வேலவிநாயகர் திருக்கோயில், கஞ்சமாநாதன் பேட்டை - 607302
🔱 Velavinayakar

📜 About this temple

கிள்ளையில் இருந்து பிச்சாவரம் சாலையில் நெடுஞ்சாலையோரம் உள்ள இடத்தில் சிலர் வீடுகட்டி வசித்தனர். பாவாடை என்பவரும் சிறு வயதில் திருணமாகி மனைவி, பிள்ளைகளுடன் வசித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றிய போது வீடு இழந்தவர் வறுமையில் வாடி செய்வதறியாமல் தவித்தவர் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது பன்றி மேய்க்கும் குரவர் ஒருவர் ஏன் முகம் சோர்ந்து போய் உள்ளாய்? என்று கேட்டவர் அதோ அந்த இடத்திற்கு சென்று பார் அதிசயம் காண்பாய் என சொல்லியுள்ளார். பாவாடை நடந்தே சென்று திரும்பி பார்த்த போது பன்றிக்கூட்டமும் இல்லை, சம்மந்தப்பட்ட குரவரும் இல்லை. அதிர்ச்சியில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த போது சிரித்த படி ஓர் உருவம் தென்பட்டுள்ளது. தவறி விழுந்த இடத்தில் காலில் ஒரு கல் தென்பட்டதை தோண்டி பார்த்த போது தும்பிக்கை இல்லாத விநாயகர் சிலை. அதை எடுத்து பனை ஓலையில் கொட்டகை அமைத்துள்ளார். அவரை வணங்கியவருக்கு சில தினங்களில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை கிடைத்துள்ளது. இந்த விநாயகர் ஆசியால் கிடைத்தது எனக்கூறி அவருக்கு யோக விநாயகர் என பெயர் சூட்டி அழைத்தார். அதன் கோயில் கட்ட பல்வே றுப்பகுதிகளுக்கு சென்று யாசகம் எடுத்து கோயில் கட்ட முயன்ற போது பல்வேறு கருங்கல் சிலைகள் கிடைத்துள்ளது. அவற்றை அப்பகுதியில் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். வாகன விபத்து மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வெற்றி மற்றும் யோக விநாயகர் அருள்பாலிக்கின்றனர்.

சித்திரைமாதம் முதல்வாரம் சூரிய ஒளி படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).