📜 About this temple
17ம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் இருந்தபோது இந்த கோயிலுக்கு மன்னர்களால் ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. எனவே இவ்வூருக்கு ஸ்ரோதிரியம் கோவிலூர் என்ற பெயர் இப்போதும் இருக்கிறது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை ஏழுமலையான் வெங்கடாசலபதியின் மூத்த சகோதரர் என சொல்கிறார்கள். பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார்.
பெருமாள் கோயில்களில் எத்தனையோ விதமான நைவேத்தியங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்யப்படும் பெருமாள் கோயில் தர்மபுரி மாவட்டம் கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு நைவேத்தியம் செய்கிறார்கள்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).