🛕 Arulmigu Gopinathaswamy Temple

அருள்மிகுகோபிநாதசாமி கோயில், Seelapadi - 624005
🔱 Gopinathaswamy

📜 About this temple

நாயக்கர் காலத்தில் காசி யாத்திரை சென்ற ஓர் அந்தணர் வழியிடையில் ஆந்திர மாநிலம் பெல்லாரி தேசத்தை அடைந்தார். நீண்டநாட்களாக மழை இல்லாததால் அங்கு வறட்சி நிலவியது. நாட்டை ஆண்டு வந்த வல்லாள மன்னனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற பசு மந்தைகள் இருந்தன. வறுமையில் இருந்த மன்னனிடம் தனது பசிப்பிணியை போக்குமாறு அந்தணர் கோரினார். பல சிரமத்திற்கு மத்தியில் அவருக்கு மன்னனும் உணவமுது கொடுத்து உபசரித்தான். பசி தீர்ந்த அந்தணர்... பாண்டிய நாடு சென்றால் வறட்சி நீங்கி வளமுடன் வாழலாம்.... பசுக்களுக்கும், தங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கும் என யோசனை கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார். வல்லாள மன்னனுக்கு பின்னர் அவனது மனைவியும், மகனும் சில பணியாட்கள் உதவியுடன் பசு மந்தைகளுடன் பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டனர். நுழைவு வாயிலான ரெட்டியார் சத்திரம் அருகில் ஓர் குன்றின் அடியில் தங்கினர். அப்பகுதி செழிப்பாக காட்சியளித்தது. அந்த இடத்தில் தங்கி பசுக்களை காத்து வந்தனர். சில ஆண்டுகள் கழித்து படிப்படியாக மழை குறைந்து அப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு... மாடுகள் இறையின்றி வாடின. வறுமையில் வாடிய கோபிநாதன் மாடுகளுக்கு இரையாக புல்லும், முளைத்து வறுமை நீங்கினால் தன் உயிரை மாய்த்து காணிக்கை ஆக்குகிறேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டான். அன்று இரவு நல்லமழை பெய்து வெள்ளம் ஓடியது. புல் மலை முழுவதும் முளைத்தது. தன்னுடைய சங்கல்பம் நிறைவேறியதால் ஒரு வேப்ப மரத்தில் எருதுவை கட்டி விட்டு அதன் கொம்பில் விழுந்து இறந்தான். இதைப் பார்த்த அவனது தாயும் உயிர் விட்டாள். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் தரையில் படுத்துவிட்டன. கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான்களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர் திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார். அவர் முந்தைய கால அற்புதங்களை கூறிய அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசாபாசங்கள் கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழா

இத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது. மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).