🛕 Arulmigu Kadhir Narasingaperumal Temple

அருள்மிகு கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், Ambathurai - 624302
🔱 Kadhir Narasingaperumal

📜 About this temple

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது? எப்படி சிலை வடிப்பது? என்ற குழப்பம் இருந்தது.ஒருசமயம் சிவன், பெருமாள் இருவரும் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தைக் காட்டி கோயில் எழுப்பும்படி கூறினர். அதன்படி இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புவாக சிவலிங்கம் இருந்ததைக் கண்டார். பின்பு, பெருமாள் சிலை வடித்த மன்னர் லிங்கத்தின் அருகிலேயே பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பினார்.பெருமாளுக்கு, "நரசிங்கப்பெருமாள்' என பெயர் சூட்டினார். காலப்போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, அவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்பெற்றது.

மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).