🛕 Arulmigu Kalahatheeswarar Temple

அருள்மிகு காளகத்தீசுவரசுவாமி தி௫க்கோயில், திண்டுக்கல் - 624001
🔱 Kalahatheeswarar

📜 About this temple

பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம (தாமரை) தடாகத்தின் மத்தியில் எழுந்தருளினார். இதனால் இவர் "பத்மகிரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் திண்டிமாசுரன் என்னும் அசுரன், பக்தர்களைத் துன்புறுத்தவே, சிவன் அவனை அழிக்கச் சென்றார். சிவனின் பார்வை பட்டதுமே திருந்திய அசுரன், தன் பெயரால் இத்தலம் திகழ வேண்டுமென வேண்டினான். சிவனும் அவ்வாறே அருளவே இத்தலம், "திண்டீஸ்வரம்' எனப் பெயர் பெற்றது. திண்டீச்சுரம் என்னும் இந்நகரை ஆண்டு வந்த திண்டிமாசூரன் தேவர்கள் மீது படையெடுத்து சென்றான்.இதனால் தேவர்கள் பத்மகிரி சிவபெருமானை நாடினர். இறைவனும் சூலப்படை தாங்கி பைரவர் உருவெடுத்து அசுரனை அழித்தார். தங்களை காத்த பத்மகிரீஸ்வரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்ம பாலன் எனும் சிவபக்தி நிறைந்த அரசனிடம் திண்டிமா புரி அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு தேவர்கள் விண்ணுலகம் சென்றனர். தர்மபாலனும் பத்மகிரியின் சிகரத்தில் பத்மகிரீசருக்கு ஆலயம் கட்டினான். மொகலாய ஆதிக்கத்தின்போது மலை மீதுள்ள இறைவனும், இறைவியும் உற்சவ மூர்த்திகளாக நகருக்குள் இப்போதிருக்கும் காளகத்தீஸ்வர ஆலய இடத்தில் வைத்து வழிபட்டனர். பின்பு காளஹஸ்தீஸ்வரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்து அவர்களுக்கும் அதே பூஜை பெருமைகளையும் தந்து வழிபட்டனர். திண்டீஸ்வரம் என்ற பெயர் திண்டுக்கல் என மருவியது.

எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர் சன்னதி உள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).