🛕 Arulmigu Maraathi Amman Temple

அருள்மிகு மாரத்தி அம்மன் திருக்கோயில், பழனி - 624601
🔱 Maraathi Amman

📜 About this temple

பஞ்சபாண்டவர்கள் தங்களின் வன வாசத்தின் போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இதனால் தான் இந்த மலை ஐவர் மலை எனஅழைக்கப்படுகிறது. மேலும் பழனி மலை முருகன் சிலையை நவ பாஷானத்தால் உருவாக்கியவரான போகர் இங்கிருந்து தான் முருகன் சிலையை செய்துள்ளார். அதாவது போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார். இந்த போகர் புராண காலத்தில் நந்தியாக இருந்தவர். இதற்கான ஆதாரம் போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு, ஆகிய நூல்களில் உள்ளதாக இங்குள்ள தாண்டேஸ்வரன் என்பவர் தெரிவித்தார். அதே போல் இம்மலையிலுள்ளகுழந்தை வேலப்பர் கோயிலுக்கும் தனி வரலாறு உண்டு. பல வருடங்களுக்கு முன் நாராயண சுவாமியின் சீடர்களில் ஒருவரான முருகானந்தம் இந்த மலையில் வசித்த போது லட்சுமணன் என்பவருக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த குஷ்ட நோய் தீர ஐவர் மலையில் குழந்தை வேலப்பர் கோயில் கட்டி வழிபட்டால் குஷ்ட நோய் தீரும் என முருகானந்தம் சுவாமி கூற அதே போல் லட்சுமணனும் கோயில் கட்டி வழிபடுகிறார். இதனால் இவருக்கிருந்த குஷ்ட நோய் போய்விட்டது.

ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர். இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில், ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).