📜 About this temple
முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் கோயில் எழுப்பும்படி சுட்டிக்காட்டினார். அதன்பின்பு பக்தர்கள் சுவாமி காட்சி தந்த வடிவத்திலேயே சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினர்.முதலில் நரசிம்மருக்கு கோயில் அமைக்க விரும்பியதால், இந்த திருநாமத்தையே சுவாமிக்கு சூட்டினர்.
இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம். இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).