📜 About this temple
ஒரு சமயம், வைரம்பாளையத்து ஓடையில் கரையை மூழ்கடிப்பது போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே இருவர் வேட்டைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டு இருந்தனர். ஆற்றின் நடுவே வழியில் குறுக்கிட்ட பேழை ஒன்று மிதந்து வருவதை அவர்கள் பார்த்தனர். கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தைப் பார்த்து மிரண்டாலும் ஆர்வம் மிகுதியால் துணிச்சலாக ஆற்றில் இறங்கி பேழையை கரைக்கு எடுத்து வந்து திறந்து பார்த்தனர். அதில் மண் பொம்மைகள், அரிவாள், காதோலை, கருகமணி இருந்தன. அவர்கள் அதை ஓடையின் கரையில் வளர்ந்திருந்த மரத்தின் அடியில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அன்றிரவு, பக்தர் ஒருவரின் கனவில் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் தோன்றின. கூடவே ஓடையில் மிதந்து வந்தவை சாதாரணப் பொருட்கள் அல்ல; அவை கன்னிமார் தெய்வங்கள். அந்த தெய்வங்களுக்கு ஓர் ஆலயம் கட்டுங்கள் என அசரீரியும் ஒலிக்க, அவர் திடுக்கிட்டு எழுந்தார். தான் கனவில் கண்டதையும் கேட்டதையும் ஊர் மக்களிடம் தெரிவித்தார். பின்னர் அசரீரி வாக்கின்படி ஊர் மக்கள் ஒரு கோயிலை அமைத்து, அங்கு கன்னிமார் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
சப்தகன்னியருக்கு தனி கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).