🛕 Arulmigu Rajakaliamman Temple

அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோவில், தெத்துப்பட்டி - 624706

📜 About this temple

அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன. பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கன் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூஜை செய்ய தன் தவ சக்தியால் ஒரு கல்லின் மீது கமண்டல நீர் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்து கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூஜை செய்ய துவங்கியுள்ளார். பூஜையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேஸ்வரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளிப்பதுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார். தன் தவபயனால் மீண்டும் பூமி மாதாவாகிய அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருக பெருமானை வழிபட்டுள்ளார். முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்ததால் கல் அல்லாத முருகன் சிலையை பழநியில் உருவாக்கி வழிபட அருள்பாலித்த வண்ணம் 18 சித்தர்களை கலந்து ஆலோசனை செய்து நவபாஷாணத்தால் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கி வழிபட்டார். ராஜகாளியம்மன் வரலாறு: மதுரை மீதும், பாண்டியன் நெடுஞ்செழியன் மீதும் கண்ணகி சாபம் இட்டதால் மதுரை தீ பிடித்து எரிந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறியுள்ளார். அதன்படி நெடுஞ்செழியன் உயிர் துறந்தான். மதுரை நகர் தீப்பற்றி எரியும் போது அடுத்து என்ன செய்வது என தெரியாது கண்ணகி தெருவில் வருகிறாள். அப்போது மதுராபதி தெய்வம் கண்ணகி முன் தோன்றி பூர்வஜென்ம வினையை உணர்த்தி வழிமுறை நெருப்பு தணிந்தது என கூறியுள்ளார். போகர் ஓலை சுவடி குறிப்பின்படி மதுராபதி தெய்வமான மதுரை காளி, பாண்டியன் அரண்மனைக்கு சென்றதாகவும், பாண்டியன் நெடுஞ்செழியன் கையில் செங்கோல் இருந்ததால் மதுராபதி அம்மன் மன்னனின் செங்கோலை கையில் தொடும் போது பாண்டிய நெடுஞ்செழியன் அபய குரலில் மீனாட்சி, சொக்கநாதா என கூக்குரலிட்டார். மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் தோன்றினர். நெடுஞ்செழியன் சாப நிவர்த்தி கேட்க சொக்கநாதருக்கும், மதுராபதி தெய்வத்திற்கு தர்க்கம் ஏற்பட்டது. ச

இங்குள்ள ஆதிராஜகாளியம்மன் அத்திமரத்தால் உருவாக்கப்பட்டது. அஷ்டநாகர் சிலையில் 8 தலை பாம்பின் நடுவில் கிருஷ்ணன் நடமாடுகிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).