🛕 Arulmigu Somalingaswamy Temple

அருள்மிகு சோமலிங்கசாமி திருக்கோயில், Kasavanampatti - 624705
🔱 Somalingaswamy

📜 About this temple

நம் முன்னோர்கள் கோயில் வழிபாட்டை மூன்றாக பிரித்து உள்ளார்கள். அந்த முறைப்படி பார்த்தால், மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் என இம்மூன்றும் ஒருங்கே அமைய பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். சித்தர்கள் கண்ட சிவவழிபாடு அருளாளர்களாலும், ஆன்றோர்களாலும் மக்கள் அமைதியுடன் மகிழ்வான வாழ்வு பெற ஓர் உந்து சக்தியாய் அமைக்கப்பட்டதே ஆலய வழிபாட்டு முறையாகும். குறிப்பிட்ட இடங்களில் மனதைக் குவித்து நல் வழிப்படுத்தும் திருவருள் நிரம்ப இருப்பது கண்டு, சித்தர்களும் நம் முன்னோர்களும் அவ்விடங்களில் கோயில்கள் அமைத்து, இறைவன் திருஉருக்களைப் பிரதிஷ்டை செய்து அனைவரும் பயனடையச் செய்துள்ளனர். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் இம்மூன்றும் இயற்கையாகவே சித்தர்கள் அமைத்து வழிபட்ட புண்ணிய ஸ்தலமாகும். இயற்கை எழில் மிகுந்த மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் மன அமைதியோடு இறைவனை வழிபட ஏற்ற இடமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிரங்காடு கிராமம், கன்னிவாடி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரிகேச பர்வத மலையில் மெய்கண்ட சித்தர், வாழையானந்த சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள் மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.இறைவன் எம்பெருமான் சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக பிரதிஷ்டை செய்து வணங்கிய புண்ணிய ஸ்தலம் ஆகும். கோரக்கர் எழுதிய மலைவாகடம் என்ற நூலில் இருந்து இம்மலையில் சித்தர்கள் வாசம் செய்திருக்கிறார்கள் என்று தெளிவாகியுள்ளது.பழனியில் முருகனுக்கு நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம் செய்துள்ளார்.கரூரார் ஜலத்திரட்டு என்ற நூலின் மூலமாக போகர் சித்தர் இத்திருக்கோயிலுக்கு வந்த பொழுது, (ஒரு சமயம் அவர் கவுரிபூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து அங்கலட்சணங்களும் பொருந்திய பெண் வேண்டுகின்றார். அவருடைய சீடர்களான கொங்கணர், கரூரார் ஆகிய இருவரை பெண்களில் உயர்ந்த ரகமான பத்மினி ரகத்தைச் சேர்ந்த பெண் தேடி சென்ற போது பெண் கிடைக்காத காரணத்தால் அந்த ரக கல்சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அந்த சிலையை உயிராக்கி கொண்டு சென்றனர். அப்போது போகர் கல் நீ வாடி என்று அழைத்ததின் பேர

இத்திருக்கோயிலில் நந்தியெம்பெருமான் விநாயகர் முன்புறம் அமைந்துள்ளார். இந்நந்தியெம்பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும் இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்தருகின்றார். அதேபோல் எம்பெருமான் சிவபெருமான் எதிர்புறம் அமைந்து உள்ள நந்தியெம்பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும், இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்பாலிக்கின்றார் என்பது சிறப்புமிக்கதாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).