🛕 Arulmigu Vanadurgai Amman Temple

அருள்மிகு வனதுர்க்கை அம்மன் திருக்கோயில், பழனி - 624601
🔱 Vanadurgai Amman

📜 About this temple

புராண இதிகாச காலங்களில் இருந்து துர்க்கா வழிபாடு போற்றப்படுகிறது. துர்க்கா என்றால் கோட்டை அரண் என்று பொருள். துர்க்கை அரண் போல் நின்று தீய குணங்கள் என்ற பகைவர்கள் நம் உள்ளத்தில் புகாமல் காப்பதால் பராசக்தியை துர்க்கை என்கிறோம். திண்டுக்கல் வேதாத்திரி நகரில் சிம்மத்தின் மீது அமர்ந்து தன் வலது பாதத்தை பத்மத்தின் மீது பதித்து பின் இரு கரங்ககளில் சங்கு, சக்கரம் விளங்கவும் முன்கரங்கள் அபய, வரத முத்திரைகளோடு அருளாட்சி செய்கிறார். இங்குள்ள துர்க்கை வீரமகள் வெற்றியின் சின்னமாக திண்டுக்கல் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது நம்பிக்கை கொண்டு பக்தி செய்கிறார்களோ அவர்கள் இகபர சுகங்களை அடைவது திண்ணம். சக்தி கொண்ட துர்கை, வேதாத்திரி நகரில் அமைக்க வேண்டும் என இக்கோயில் அறங்காவலர்கள் முடிவு செய்தனர். இதற்காக மகாபலிபுரத்தில் 6 அடி உயர துர்கை அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.

பொதுவாக அம்மன் கோயில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்ம வாகனம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் அம்மன் சிம்ம வாகனத்தில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு. மன அமைதி தரும் அம்மன், திண்டுக்கல் மாவட்டத்தில் துர்கைக்கென்று தனிக்கோயில் இங்கு மட்டுமே உண்டு. ராஜகோபுரத்தில் அஷ்ட துர்கைகள் உள்ளன.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).