🛕 Arulmigu Vinayagar Temple

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், S. Perumal Koil Patti, S. Perumal Koil Patti - 624005
🔱 Vinayagar

📜 About this temple

இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன்பின் தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் சிவனடியார் எவரும் அவர் கண்ணில் படவில்லை. தன் பணியாளரை ஊருக்குள் யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். வைகை நதியில் சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் சொன்னார். அவர் சென்று அழைத்தார். "நானும் சிவ தரிசனம் செய்தபின்தான் சாப்பிடுவது வழக்கம்!' என்றவர், தன்னை ஒரு சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினார். அப்போதுதான், "அங்கு சிவாலயம் எதுவுமில்லை' என்ற உண்மை சிவபக்தருக்கு உரைத்தது. இதைக்கேட்டு கோபம் கொண்ட அடியவர், சிவனுக்கு கோயில் இல்லா ஊரில் உபசரிப்பைக்கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனச் சொல்லி சென்று விட்டார். இதனால், வருந்திய பக்தர் உடனே காசி சென்று ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இவருக்கு "விஸ்வநாதர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.

கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை "உத்தரவாகினி' என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).