📜 About this temple
சபரிமலையை போல, இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருளு கிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப் பட்டதாகும். சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர், தனது ஒரு விரலை மட்டும் காட்டி "இறைவன் ஒருவனே!' என்ற தத்துவத்தையும், "மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்கு,' என்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, ""இறைவனான இவரை வணங்கு!'' என காட்டுகிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடைதிறக்கப்படும். விசேஷம் முடிந்து, நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு. மீண்டும் நடை திறக்கும்போது விபூதி அலங்காரத்தைக் கலைத்து, அதையே பிரசாதமாக தருகின்றனர்.
இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).