📜 About this temple
ஈரோட்டில் முதன்மையான கோயிலாக கொங்காலம்மன் கோயில் உள்ளது. கொங்கு நாட்டின் குல தெய்வம் இவள். செல்லமாக "கொங் கலாயி' என்று மக்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் இருந்த கொங்கலம்மனை சிலர் தங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் திருடி சென்றனர். வெப்படை ஆனங்கூர் அருகே சென்ற போது, வண்டியின் அச்சு முறிந்தது. இதையடுத்து அம்மனை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் ஓடிவிட்டனர். ஆனங்கூர் மக்கள் இந்த அம்மன் சிலையை பார்த்து பரவசமடைந்து அங்கேயே பிரதிஷ்டை செய்து தெய்வமாக வழிபட்டனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஈரோடு மக்கள் ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இது ஆதி கொங்கலம்மன் என்றழைக்கப்படுகிறது. இந்த அம்மன் 12 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கைகளில் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை இடம் பெற்றுள்ளது. இந்த அம்மன் சிலையை பார்த்த மக்கள் ஈரோட்டில் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். ஈரோட்டில் பிற கோயில்களில் விழாக்கள் கொண்டாடும் போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் முதல் தீர்த்தம் கொங்கலம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் மற்ற கோயில்களுக்கு கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது.
இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).