🛕 Arulmigu Mathyapureeshwarar Temple

அருள்மிகு மத்யபுரீஸ்வரர் திருக்கோயில், கூகலூர், கூகலூர் - 638313
🔱 Mathyapureeshwarar

📜 About this temple

வாதாபி, வில்வலன் என்னும் இரு அசுரர்கள், மகரிஷிகளின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு உணவின் வடிவில் சென்று, பின்பு வயிறைக்கிழித்து வெளியேறி, அவர்களை உணவாக சாப்பிடும் வழக்கமுடையவர்கள். அவர்கள், உலகை சமப்படுத்த பொதிகை சென்ற அகத்தியரைக் கண்டனர். அவரையும் உண்ண திட்டமிட்டனர். வாதாபி மாங்கனி உருவெடுத்தான். அதை எடுத்துக்கொண்ட வில்வலன், சிவனடியார் வேடத்தில் அகத்தியர் முன் சென்றான். அவரிடம், ""சிவனின் கட்டளைக்காக தென்திசை செல்லும் தாங்கள், என் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என வேண்டி மாங்கனியைக் கொடுத்தான். அவரும் அதை சாப்பிட்டு விட்டார். அப்போது, வில்வலன் அகத்தியரின் வயிற்றுக்குள் இருந்த வாதாபியை வெளியே அழைத்தான். தன் ஞானதிருஷ்டியால் இதையறிந்த அகத்தியர், ""வாதாபி ஜீரணோத்பவ!'' எனச் சொல்லி வயிற்றைத் தடவினார். அவ்வளவுதான்! வாதாபி ஜீரணமாகி விட்டான். கோபம் கொண்ட வில்வலன், சுயவடிவமெடுத்து அகத்தியரை அழிக்க முயன்றான். அகத்தியர் அவனையும் சம்ஹாரம் செய்தார். இருவரைக் கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) உண்டானது. இந்த தோஷம் நீங்க, காவிரி ஆற்றின் நடுவில் இருந்த குன்றில் மணலில் லிங்கம் வடித்து பூஜை செய்து விட்டு கிளம்பினார். அந்த லிங்கம் அப்படியே இறுகிப்போனது. ஆற்றின் நடுவில் இருந்ததால் பிற்காலத்தில் இவருக்கு, "நட்டாற்றீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு சிவன் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் பிருத்வி (மண்) தலமாகும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் அத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். நடக்கும் முருகன்: இங்குள்ள முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்றதன் அடிப்படையில் இக்கோலத்தில் காட்சி தருவதாக சொல்கின்றனர். இவர் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).