🛕 Arasukatha Amman

அரசுகாத்த அம்மன்
🔱 Devi

📜 About this temple

பார்வதிதேவி காஞ்சியில் தவம் செய்தபோது அரசுகாத்த அம்மன், பச்சை அம்மன், சந்தைவெளியம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமைப் பொறுப்பேற்றவள் அரசுகாத்த அம்மன். சோழமன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் அரசுகாத்த அம்மன் என்று பெயர் வந்ததாக கூறுவர். வலதுகாதில் குண்டலம், இடதுகாதில் தோடு அணிந்து இருப்பாள். இவள் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இருகோரைப்பற்களும், நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையும், கீழ்க்கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடதுகாலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள் ஒரு நகரைப் பாதுகாப்பவர்களாக, காவல் தெய்வங்களாக விளங்குவார்கள்.

இங்கு அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).