📜 About this temple
தட்சனின் பிள்ளைகளான கிருத்திகை, ரோகிணி முதலான 27 பெண்களை சந்திரன் மணந்து கொண்டான். ஆனால், அவன் ரோகிணியின் மீது மட்டும் அன்பு காட்டினான். இதனால் வருந்திய மற்ற மனைவியர், தங்களது தந்தை தட்சனிடம் கணவர் தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினர். எனவே கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் தேயும்படியாக சபித்து விட்டான். இந்த சாப விமோசனத்திற்காக சந்திரன், பூலோகத்தில் பல தலங்களில் சிவனை வழிபட்டான். இத்தலத்திலும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிவன் அசுரர்களை அழித்த எட்டு தலங்கள், "அட்டவீரட்ட தலங்கள்' எனப்படுகிறது. இதில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூர், அந்தகாசுரனை அழித்த தலமாகும். இத்தலத்து சிவனின் அம்சமாக, இங்கு சிவன் காட்சி தருவதாக ஐதீகம். எனவே, இங்கு சிவன் "வீரட்டேஸ்வரர்' என்றே அழைக்கப்படுகிறார். தலமும், "உப வீரட்ட தலம்' என்றழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் என்ற மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்று.
சந்திரன், இங்கு வழிபட்டதை உணர்த்தும்விதமாக, கோயில் முன் மண்டபத்தில் இரு கைகளில் மலர் வைத்தபடி, சந்திரன் காட்சி தருகிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் தாமரை பீடத்தில் நவக்கிரக மண்டபம் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).