🛕 Arulmigu Kalyana Venkatramanaswamy Temple

அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் - 639005
🔱 Kalyana Venkatramanaswamy

📜 About this temple

சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம் மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார்.தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.

இங்கு பெருமாள் பாறையில் பிரம்மாண்டமான சுயம்பு மூர்த்தியாக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் செருப்பை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).