📜 About this temple
பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின் பெயர் சிவபெருமான். இவரிடம் பணிபுரிந்தவர் குரும்பநாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்த ஊர் மக்கள் பக்தியில் சிறந்து விளங்கினர். குரும்பநாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி வந்தார். அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார். தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் பொருட்களை ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார். குரும்ப இனத்தவரின் தொழில் ஆடு மேய்ப்பது ஆகும். ஆட்டின் முடியில் செய்த கம்பளியில் அந்த பொருட்களை எடுத்து வருவார். எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார். இறைவனின் பாதங்களை தன் நெஞ்சில் வைத்து வணங்குவதே தன் கடமை என எண்ணி வாழ்ந்து வந்தார். திருத்தொண்ட பதிகங்களை பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் சொல்லி வந்தார். இந்த நேரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் கைலாயத்திற்கு அழைக்க முடிவு செய்தார். இதை அறிந்த குரும்ப நாயனார், தன் குருவை பிரிந்து தனித்துவாழ இயலாது என வருந்தினார். தன் குருவுக்கு முன்னதாக யோகநெறியின் மூலம் சிவபெருமானின் திருவடியை சேர்வேன் என முடிவெடுத்தார். அதன்படியே சிவலோகத்திற்கும் சென்று சிவனின் திருவடியின்கீழ் அமர்ந்தார். பெரியபுராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. குரும்ப நாயனாரின் குலதெய்வம் ஆதிமகாலட்சுமி. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்தபோது உருவானவள் மகாலட்சுமி. அப்போது பெருமாள் அமிர்தத்தை தேவர்களுக்கும், விஷத்தை அசுரர்களுக்கும் பங்கிட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தகாசூரன் என்பவன் இதை தனது ஞானத்தால் அறிந்துகொண்டு விஷத்திலிருந்து தப்பிக்க ஓடிச்சென்றான். அப்போது மகாலட்சுமியைப் பார்த்தான். அவள்மீது மோகம் கொண்டு அருகில் சென்றான். மகாலட்சுமி உடனே காவிரிக்கரை வழியாக ஓடிச்செல்லும்போது அசுரனும் விரட்டி வந்தான். அப்போது ஆடு மேய்க்கும் குரும்ப இனத்தவர்கள் மேட்டுமகாதானபுரம் என்ற இடத்தில் தங்கள் தொழிலை செய்து கொண்டிருந்தார்கள். மகாலட்சுமி அசுரனிடமிருந்து தப்ப குரும்பர் இனத்தவர் இருந்த இடத்தில் பூமிக்குள் ஒளிந்துகொண்டாள். அந்த இடத்தில் சிவபக்தனான ராவணன் ஈசனை நினைத்து தவமிரு
இந்த அம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).