🛕 Sri Chandra Choodeswarar Temple

ಚಂದ್ರ ಚೂಡೆಷ್ವರ ದೇವಸ್ಥಾನ
🔱 Chandra Choodeswarar

📜 About this temple

கயிலாயத்திலிருந்து சுவாமி அம்பாள் இருவரும் வரும்போது சுவாமி உடும்பு ரூபம் எடுத்து வருகிறார். அந்த உடும்பை பிடிக்க அம்பாள் பின் தொடருகிறார். காடு மேடு தாண்டி இப்பகுதிக்கு வருகிறார்.அப்படி வரும்போது முத்கலர், உத்சாயனர் என்ற இரு பெரும் ரிஷிகள் இம்மலையில் தவமிருக்கின்றனர். தங்களது தவ ஞானத்தால் ஈசன் என்று உணர்ந்து அந்த உடும்பை பிடிக்க எண்ணினர். அம்பாளோ உடும்பின் மேல் மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பை பிடிக்க ஆசைப்பட்டு பின்தொடர்கிறார். இருவரிடமும் மாட்டிக்கொள்ளாது இருக்க சுவாமி மறைந்து விடுகிறார். கோபம் கொண்டு ரிஷிகளை அம்பாள் சபிக்க ரிஷிகள் இருவரும் முறையே ஊமையன் செவிடன் ஆகி விடுகின்றனர். பின்பு அம்பாள் கோமுகம் வழியாக தவமிருக்கிறார்.

மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் இந்த லிங்கம் உள்ளது.மழை இல்லாத காலங்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புக்குள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர்.16 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி தெப்பமாக வைத்து விட்டு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கி விட்டு வந்து விடுகிறார்கள். பின்பு சில மணி நேரங்களில் தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று பொருள். தண்ணீர் வடியாமல் தெப்பம் போல் நின்றிருந்தால் அடுத்த சில நாட்களில் மழை வருமாம். இந்த சில வருடங்களுக்கு முன் இதே போல் தெப்பம் போல் இருந்து அந்த சமயத்தில் மழை வந்த அதிசயம் நடந்திருக்கிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).