🛕 Arulmigu Narasinga Perumal Temple

அருள்மிகு ஸ்ரீநரசிங்கப் பெருமாள் திருக்கோயில், Naduvakottai - 625706

📜 About this temple

சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவன் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றான். ஆனால், அவனது மகனாகப்பிறந்த பிரகலாதன், தந்தையை வணங்காமல் நாராயணனை வணங்கி வந்தான். கோபம்கொண்ட இரணியன், மகனை துன்புறுத்தி அவன் வணங்கும் நாராயணனை காட்டும் படி கூறினான். அது பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும் அந்திக்காலம். அப்போது, தூணிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட உருவில் தோன்றிய மகாவிஷ்ணு, இரணியனை அழித்தார். இவரே, இத்தலத்தின் மூலவராக இருந்து அருளுகிறார்.

இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக் கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில் "கஜகேசரி'யாக உள்ளதையும் காண கண்கோடி வேண்டும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).