🛕 Arulmigu Raja Rajeswari Temple

மீனாட்சி அம்மன் கோவில்
🔱 Devi

📜 About this temple

""ஸ்ரீமத் ஆத்தா என்ற ஸ்ரீ வித்யானந்த பட்டாரகர் தான் முதலில் இத்தலத்தை ஸ்தாபித்து, அம்பாளையும் அதன் கீழ் ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ சக்கரத்தில் கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் உள்ளனர். அம்பாள் "இகபரசவுபாக்கியதாரிணி'யாக வீற்றிருக்கிறாள். நாம் இங்கு வந்து மனமுருகி பிரார்த்தனை செய்தாலே போதும் நமக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும். "ஹரித்ராம்பிகை' அம்மன் இங்கு மற்றுமொரு சிறப்பம்சம். 25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளாள். கோயில் மண்டபம் நாகர் வடிவில் அமைத்துள்ளதால், நம்பி வந்தவர்களுக்கு நன்மை கிடைக்கும். இங்கு தரப்படும் ஸ்ரீ சக்ர தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தாலும் அதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் பவுர்ணமிதோறும் மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை நடக்கும் அபிஷேகத்தை அனைவரும் பார்க்கலாம்.

25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).