📜 About this temple
ஜமதக்னி முனிவர் யாகங்கள் நடத்துவதில் வல்லவர். இவருடைய மனைவி ரேணுகா. அம்பிகையின் அம்சமான இவள், ரைவதன் என்பவரின் மகள். ஜமதக்னிக்கு தன்னுவன், அனுவன்,விச்வாவசு, பரசுராமன் என்னும் நான்கு பிள்ளைகள். பரசுராமன் திருமாலின் அவதாரம். ரேணுகா கற்புத்திறன் மிக்கவள். தன் பதிவிரதா தன்மை காரணமாக, ஆற்று மணலில் குடம் செய்யும் வல்லமை பெற்றிருந்தாள். தினமும் நதியில் நீராடி, மணல் எடுத்து குடம் வனைவாள். அதில் தண்ணீர் எடுத்து வந்து யாக பணிகளுக்கு உதவுவாள். ஒருநாள், அவள் வானில் வலம் வந்த கந்தர்வனின் பிம்பத்தை நதி நீரில் கண்டாள். இப்படியும் உலகில் ஆணழகர்கள் இருப்பார்களா? என கணநேரம் மனதில் நினைத்தாள். இதனால், மண்ணில் குடம் செய்யும் விசேஷ சக்தியை இழந்தாள். ஜமதக்னிக்கு ஞானதிருஷ்டியில் நடந்தது தெரிந்து விட்டது. தப்புக்கு தண்டனையாக மனைவியை வெட்டுவது என்று முடிவெடுத்து, பரசுராமரிடம் பணியை ஒப்படைத்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப, அன்னையை வெட்டினார் பரசுராமர். ஜமதக்னி அவரைப் பாராட்டி, என்ன வரம் வேண்டும்? என்றார். தனது தாயை மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும், என்றார். ஜமதக்னியும் அவ்வாறே செய்தார். அவளே, கலியுகத்தில் மாரியம்மனாக எங்கும் வீற்றிருந்து மக்களுக்கு மழை வளம் தரவும், நோயற்ற வாழ்வளிக்கவும் வரம் தந்தார். மழைக்கு மாரி என்ற சொல் உண்டு.
மதுரை, நெல்லை, ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் இருப்பது போன்று சிவபெருமான் சந்நிதியின் வலது புறம் அம்மன் சந்நிதி உள்ளது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).