🛕 Arulmigu Selva Vinayagar Temple

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், வலச்சிகுளம், சிட்டாம்பட்டி - 625122
🔱 Selva Vinayagar

📜 About this temple

இந்த விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு 16 வகையான செல்வ வளங்களை அருளும் விதத்தில் வலம் சுழி விநாயகராக உள்ளதால் செல்வவிநாயகர் என பெயர் பெற்றுள்ளார். மங்களகரமாக ஆரம்பிக்க விநாயகர் வழிபாடும், மங்கள ஆரத்தி எடுத்து வெற்றிகரமாக முடிக்க அனுமன் வழிபாடும் சிறந்தது. இதனால் தான் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையாரை முதலில் வழிபட்டு ஆரம்பிக்க வேண்டும்; காரியங்கள் கைகூடிய பின்னர், ராம நாமத்தை ஜெபித்து அனுமனை வணங்கி முடிக்க வேண்டும் என்பது நம் முன்னோர் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் தான் இக்கோயிலில் விநாயகர் சன்னதியை முதலில் அமைத்து கடைசியில் விநாயகரின் எதிரில் அனுமன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மகன் செல்வ விநாயகர், அப்பா கோடீஸ்வரன், அம்மா கோடீஸ்வரி என் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அள்ளத்தரும் கடவுளர்கள் இங்கு உள்ளதால் வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு தேவை கல்வி, செல்வம், வீரம். இந்த மூன்றைத்தவிர அனைத்து செல்வங்களையும் பெற இங்கு வரும் பக்தர்கள், விநாயகர் சன்னதியில் ஆரம்பித்து கோடீஸ்வரர், கோடீஸ்வரி, தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், அனுமன் என அர்சசனை செய்து வேண்டும் வரங்களை பெற்றுச்செல்கின்றனர்.

தினசரி காலை 6.45 மணிக்கு கோடீஸ்வரர் மேல் சூரிய ஒளிபடர்வது சிறப்பம்சமாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).