📜 About this temple
சிவபெருமானின் தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த முருகன் கோயிலில் தங்கினார். சுந்தரர் தங்கிய காரணத்தால் "சுந்தரர் மடம்' என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநி மலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும். பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.
அலங்காரம் செய்தே பிரபலமான கோயில் இது. பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார். பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).