🛕 Arulmigu Kalyana Prasannavenkatramanaswamy Temple

அருள்மிகு கல்யாண பிரசன்னவெங்கட்ரமணஸ்வாமி திருக்கோவில், அக்ரஹாரம், மோகனுர் - 637015
🔱 Kalyana Prasannavenkatramanaswamy

📜 About this temple

இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார்.பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, "கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.

காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலம் தனிச்சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).