📜 About this temple
ஏகாம்பரேசுவரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கதிரவனின் பொற்கதிர்கள் விழுகின்றன. உட்பிரகார மண்டபத்தில் 10 தூண்கள் உள்ளன. காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு இவற்றை தட்டினால் 10 தூணிலிருந்தும் 10 வகையான இசை ஒலிகள் எழும்புகின்றன. ஸ்தபன மண்டபத்தின் வடபுற துவாரபாலகர் உள்ள தூணின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பத்தில் ஒரே தலையைக் கொண்டு எதில் எதிராக யானை உருவமும், காளை உருவமும் ஆக இரண்டு காட்சிகளாகத் தோற்றமளிக்கும் அற்புத சிற்பம் காணப்படுகிறது. உட்பிரகார மண்டபத்தின் கன்னி மூலையில் வரகுணகணபதி அருகில் ஐந்து தலை நாகருடன் காட்சி தருகிறார். மேற்கு பிரகாரத்தில் மேற்கு புற மண்பத்தில் விநாயகர் சன்னதியும் வேல்வடிவ திருவாச்சியுடன் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் அருகில் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் அற்புத வடிவமாகக் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பம் மிகவும் அரியதாக கருதப்படுகிறது. குபேர பகவான் தனது வாகனமான மீன் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இந்த அரிய சிற்பம் கோயிலில் 12 இடங்களில் காணப்படுகிறது. இவை பன்னிரண்டு ராசிகளுக்கும் உரியதாக காணப்படுகிறது. சிவனும், அம்பிகையும் இணைந்து நடனமாடிய நாள் தைப்பூசம். சிவன் ஜோதி லிங்கமாகக் காட்சி தரும் இக்கோயிலில், பன்னிரண்டு ராசிகளுக்குரிய குபேரர்களையும் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.