📜 About this temple
ஒரு காலத்தில் கீழ்காத்தி கிராமத்தில் பெரிய மறவர், சின்ன மறவர் என்ற சகோதரர்கள் இருந்தனர். ஊருக்குள் கருப்பர் கோயில் ஒன்று இருந்தது. இந்தக் கோயிலின் கடாவெட்டுத் திருவிழாவில் வெட்டப்படும் கடாவின் மாமிசத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வது பெரிய மறவர் மற்றும் சின்ன மறவரின் வழக்கம். இதில் பெரிய மறவரது வீட்டில் ஆட்கள் குறைவு என்பதால், ஒரு முறை அவருக்குச் சற்றுக் குறைவான மாமிசத்தைக் கொடுத்தார்கள். இதனால் அடுத்த வருட கடாவெட்டின்போது கோயிலுக்கு வரவில்லை பெரிய மறவர். கிடாவை வெட்ட வேண்டிய பெரிய மறவர் வராததால் பூஜை போட முடியவில்லை. அதனால் ஆக்ரோஷமடைந்த கருப்பு பெரிய மறவரது வீட்டு ஓடுகளைப் பிரித்து உள்ளே இறங்கி, அவரை ஆலேக்காகத் தூக்கி வந்து கோயில் வாசலில் போட்டது. இதனால் கருப்பின் மகிமையை உணர்ந்து, மனம் திருந்திய பெரிய மறவர் கருப்புக்கு கடா வெட்டி, பூஜை முடித்து, குறைவான மாமிசத்துடன் வீட்டுக்குத் திரும்பினார். மாமிசம் குறைந்ததால், பெரிய மறவரை ஏளனமாகப் பேசிய அவர் மனைவி, உனக்கு நான் சோறு போட மாட்டேன். ஊரும் சாமியும் உனக்குச் சோறு போடட்டும். நீ அங்கேயே போயிடு! என்று துரத்தியடித்தாள். இதனால் விரக்தி அடைந்த பெரிய மறவர், தெற்குத் திசையில் கால் போன போக்கில் நடந்தவர் சீர்மிகு சேதுச் சீமையை (ராமநாதபுரத்தை) அடைந்தார். கால்கள் தளர்ந்ததால் அதற்கு மேல் நடக்க முடியாமல் ஒரு சீட்டைக்குள் (காடு) படுத்துக் கண் அயர்ந்தார். அப்போது சிறு பெண் குழந்தை வடிவில் வந்த ஓர் உருவம் பெரிய மறவரை தட்டி எழுப்பி, நான் உனக்கு சகாயம் பண்றேம்பா! என்றதாம். தூக்கத்திலிருந்த பெரிய மறவர் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து பார்த்தார். அவரை எழுப்பிய அந்தப் பெண் குழந்தை மறைந்து விட்டாள். ஒருவேளை கனவாக இருக்குமோ! என்று நினைத்து மறுபடியும் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அயர்ந்தார் பெரிய மறவர். பின்பு கண்விழித்து எழுந்தபோது அவரது தலைமாட்டில் ஒரு முழம் அளவில் சின்னதாக காளி விக்கிரகம் ஒன்று இருந்தது. இதைப் பார்த்து, உடல் புல்லரித்தது பெரிய மறவருக்கு. அந்த காளி விக்கிரகத்துடன் கீழ்காத்திக்குத் திரும்பி வந்தார். காளி விக்கிரகத்துடன் வந்த கணவனைப் பார்த்ததும் பனி போல் சாதுவாகிப் போன பெரிய மறவரின் மனைவி அவரை பலமாக உபசரித்தாள். இதை காளியின் மகிமையாக உணர்ந்த பெரிய மறவர் தனது வீட்டருகே இருந்த பனை மரத்தடியில் காளியை மேற்கு நோக்கி பி
மழையில் நனைந்து வெயிலில் காய வேண்டும் என்பது காளி வாங்கி வந்த வரம் என்பதால், மேல் கூரை இன்றித் திறந்த வெளியிலேயே கோயில் கொண்டுள்ளாள் காதமறவர் காளி. இங்கே காளியைச் சுற்றிப் பெண்கள் யாரும் பிரகாரம் வலம் வரமாட்டார்கள் என்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).